மோட்டார் சைக்கிளும் சைக்கிளும் மோதி விபத்து: முதியவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் 75 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மருதனார்மடத்தடியில் இருந்து உரும்பிராய் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சைக்கிளில் பயணித்த முதியவருடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் காயமடைந்த இருவரும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும் சைக்கிளில் பயணித்த முதியவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.