வாக்குவாதம் முற்றியதில் காதலி கொலை: காதலன் கைது
புத்தளம் வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்து, காதலன் தனது காதலியைக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வென்னப்புவ பொலிஸ் பிரிவின் தெற்கு வைகால பகுதியில் உள்ள வீட்டில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி உயிர் இழந்துள்ளதுடன் மாரவில பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சடலம் நீர்கொழும்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
