கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய மோட்டார்சைக்கிள் மீட்பு
கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதியில் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் பயணித்தாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் மாதம்பிடிய பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான மோதர நிபுணகேவின் உதவியாளர்கள் எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு 9 மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச்சூடானது மற்றுமொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் தலைவரான சேதவத்தே கசுனின் தரப்பினரால் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
