
நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் முச்சக்கர வண்டி விபத்து
-மூதூர் நிருபர் –
திருகோணமலை -நிலாவெளி பிரதேச வைத்தியசாலைக்கு முன்னால் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்த நிலையில், நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியும் பட்டா ரக வாகனமும் மோதியே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


