
18 ஆவது ஐபிஎல் தொடர் : திகதி அறிவிப்பு!
18 ஆவது இந்தியன் பிரமீயர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகிறது.
இந்த தொடரில் பங்குகொள்ளும் அணிகளில் 5 அணிகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த முறை முதலாவது தினத்தில் முக்கிய கலைநிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மொத்தமாக 10 அணிகள் பங்குகொள்ளும் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் நடப்பு சம்பியன் கொல்கத்தா நைட் ரைடேர்ஸ் அணி பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இரண்டாவது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டிகளின் அனுமதிச் சீட்டுக்களுக்கான விலை 1,700 ரூபாய் முதல் 7,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இணையத்தளத்தினூடாக மட்டுமே விற்பனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
