
குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தினார் ஜீவன் தொண்டமான்!
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தாக்கல் செய்துள்ளார்.
வடமேல் மாகாணம் குருநாகல் மாவட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த முறை தனது சொந்த சின்னமான சேவல் சின்னத்தில் போட்டியிடுகின்றது.
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதன் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் செலுத்தியதுடன் வேட்புமனுவிலும் கையெழுத்திட்டுள்ளார்.
