
இலங்கை மகளிர் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி!
நியூசிலாந்து மகளிர் அணிக்கும் சுற்றுலா இலங்கை மகளிர் அணிக்கும் இடையே இடம்பெற்ற முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.
கிரைஸ்சேச் ஹக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
இதற்கு அமைய துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கட்டுக்களை மட்டுமே இழந்து 102 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் மகளிர் உலகக் கிண்ண தகுதி காண் சுற்றுப் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
லாகூரில் உள்ள கடாபி மைதானம் மற்றும் நகர கிரிக்கெட் சங்க மைதானங்களில் 15 போட்டிகளைக் கொண்ட லீக் போட்டிகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.