
ஓய்வு பெற்ற ஆசிரியையும், தாதியும் கொலை : பேத்தி கைது!
மூதூர் – தாஹாநகர் பகுதியில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் பேத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் சடலங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை மூதூர் – தாஹாநகர் பகுதியில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
68 மற்றும் 74 வயதுடைய இரண்டு சகோதரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித் பெண்களில் ஒருவர் ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியர் எனவும் மற்ற நபர் தாதி எனத் தெரிவிக்கப்படுகிறது .
இந்நிலையில், கொலையுண்ட இருவரினதும் பேத்தியான 15 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.