
கல்முனை அல் ஜலால் மாணவர்களின் விடுகை விழாவும், அனுமதி அட்டை வழங்கலும்
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலயத்தில் இவ்வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களின் விடுகை விழா, அனுமதி அட்டை வழங்கும் விழா மற்றும் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் தலைமையில் இவ் நிகழ்வு இடம்பெற்றது.
தரம் 9-11 வகுப்புகளின் பகுதித் தலைவர் ஏ.எம்.எம். ஸாஹிர் அவர்களின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகத்திற்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர் அவர்களும் கௌரவ அதிதிகளாக சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி. ஏ. அஸ்மா மலீக் மற்றும் பாடசாலை முன்னாள் அதிபர் எம்.ஐ.எம். சைபுத்தீன் அவர்களும் கலந்து கொண்டனர்.
மருதமுனை ஜம்மியத்துல் உலமா உப செயலாளர் மௌலவி. ராபி எம். மப்றாஸ் சிறப்பு
பேச்சாளராகவும் அழைப்பு அதிதிகளாக சாய்ந்தமருது மழ்ஹருஷ் ஷம்ஸ் மகா வித்தியாலய அதிபர் திருமதி. எம்.சி. நஸ்லின் றிப்கா அன்சார், சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ் அதிபர் எம். ஐ. இல்யாஸ், சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் எம்.எஸ். எம். ஆரிப், ரியாழுல் ஜன்னா வித்தியாலய அதிபர் ஏ.எம். அஸ்தர் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் ஏ.எல்.எம்.இஸ்ஸத், பழைய மாணவர் சங்க செயலாளர் பொறியியலாளர் எம்.ஐ.எம். றியாஸ், பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ், உதவி அதிர்களான ஏ.எம். பாஹிம், எம்.பி.எம். பௌசான், பகுதித் தலைவர்கள், சிரேஷ்ட ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகளுடன் மார்ச் 17 இல் ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண பரீட்சைக்கான அனுமதி அட்டைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.