
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
நவகமுவ பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றுவெள்ளிக்கிழமை காலை நவகமுவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுவல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.