
கிராம சேவகர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்
இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
கிராம உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்குத் தீர்வு கோரி இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மேலும் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் அனர்த்தம், மரண சடங்கு போன்ற கடமைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.