
குற்றத்தை ஒப்புக்கொண்ட ஸ்டூவர்ட் மெக்கில்
அவுஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் மெக்கிலை (Stuart MacGill) கொக்கெயின் விநியோகத்தில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கில் குற்றவாளி அறிவித்து அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போதைப்பொருள் விநியோகக் குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவிப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்திருந்த போதிலும், அவர் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதை அடுத்து குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினருக்கு இடையிலான பரிவர்த்தனையை தாம் ஒருங்கிணைத்ததாகவும், 200 அவுஸ்திரேலிய டொலருக்கு அரை கிராம் கொக்கேயினை தொடர்ந்து கொள்வனவு செய்ததாகவும் ஸ்டூவர்ட் மெக்கில் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.