முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவு!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் ஏப்ரல் முதலாம் திகதி ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க