
எல்ல வெல்லவாய வீதியில் மண்சரிவு : போக்குவரத்து முற்றாக தடை!
-பதுளை நிருபர்-
எல்ல வெல்லவாய வீதியின் கரந்தகொல்ல பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பண்டாரவளை நிறைவேற்று பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மண்சரிவுடன் வீதிக்கு மேல் இருந்த மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் தடை ஏற்பட்டுள்ளதாகவும், மண் மற்றும் மரங்களை அகற்றும் பணியில் வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னேடுக்ப்படுவதாகவும் பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் திரு.ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார்.
அதன்படி, வீதியின் மேல் பகுதியில் மண்சரிவு செயற்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டதா என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் இன்று பரிசோதிக்க உள்ளதாக உதவிப் பணிப்பாளர் திரு.உதயகுமார மேலும் தெரிவித்தார்.