
இலங்கை முதலிடத்தில் : அமெரிக்கா 10 ஆவது இடத்தில்!
உலகில் குடும்பமாக குடியேறுவதற்கு மிகவும் பொருத்தமான 10 நாடுகளில் (Most family-friendly countries in 2025), இலங்கை முதலிடத்தில் உள்ளதாக, உலகின் முன்னணி வர்த்தக இதழான சிஎன் டிராவலர் (cntraveller) தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கு காரணமாக, சிஎன் டிராவலர் சில சாதகமான விடயங்களை முன்வைத்துள்ளது.
இலங்கையின் கல்வி முறைக்கு 1.0 இல் 0.7 மதிப்பெண்ணை சிஎன் டிராவலர் வழங்கியுள்ளது, அத்துடன் இலங்கையில் குழந்தை பராமரிப்பு செலவாக வருடத்திற்கு 354.60 அமெரிக்க டொலர்கள் செலவாகுவதாகவும், இந்த பட்டியலில் 10 ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவில் குழந்தை பராமரிப்பிற்கு வருடத்திற்கு 16,439.40 அமெரிக்க டொலர்கள் செலவாகுவதாகவும் ஒப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் குழந்தை பராமரிக்க ஒப்பீட்டளவில் மிக குறைந்த செலவே இருக்கிறது, என சிஎன் டிராவலர் சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் இருக்கும் விடுதிகள், ஹோட்டல்கள், பரந்த கடற்கரைகள், தேசிய பூங்காக்கள், ஆச்சரியத்தை கொடுக்கும் வனவிலங்குகள் ஆகியவை, ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக வாழ தகுந்த இடமாக இலங்கையை பெயரிட காரணமாக அமைந்துள்ளதாக, சிஎன் டிராவலர் தெரிவிக்கின்றது.
ஆக்கப்பூர்வமான வரலாறு, கண்கவர் கடற்கரைகள், சுவையான உணவு போன்றவற்றின் தாயகமாக இலங்கை விளங்குவதாக, சிஎன் டிராவலர் குறிப்பிட்டுள்ளது.
அந்த வகையில் சிஎன் டாராவலர் வெளியிட்டுள்ள பட்டியல்
1 இலங்கை
2 சுவீடன்
3 நோர்வே
4 நியூசிலாந்து
5 ஐஸ்லாந்து
6 ஜேர்மனி
7 பின்லாந்து
8 டென்மார்க்
9 அவுஸ்திரேலியா
10 அமெரிக்கா