
சோழன் உலக சாதனை படைத்த 2 வயது 5 மாதங்களை கொண்ட குழந்தை
மட்டக்களப்பில் அதிக ஞாபகத் திறன் மூலம் 600 இற்கு மேற்பட்ட பட அட்டைகளை அடையாளம் கண்டு ஒப்புவித்து சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் 29 மாதங்களான குழந்தை சாதனை படைத்துள்ளது.
கல்லடி கிறீன்கார்டின் விடுதியில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம், பியுபிள் ஹெல்ப்பிங் பௌண்டேசன், கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் துஷ்யந்தன் மஹிஷெறான் என்ற 2 வயது 5 மாதங்கள் பூர்த்தியடைந்த குழந்தையே சாதனை படைத்துள்ளது.
கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் த.இன்பராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிழக்கு மாகாண சபை பிரதம செயலாளர் மூ.கோபாலரெத்தினம் கலந்துகொண்டார்.
மேலும் சிறப்பு விருந்தினராக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் பாரதி கென்னடி, மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் மா.சோமசூரியம் ஆகியோர் கலந்துகொண்டனர்.