
மட்டு.போதனா வைத்தியசாலைக்கு வந்து திரும்பி சென்ற நோயாளர்கள்!
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று புதன்கிழமை நாடளாவிய ரீதியில் அடையாள பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிபகிஷ்கரிப்பினை மேற்கொண்டனர்
நேற்று பிற்பகல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகக் குழு நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து இப்பணி பகிஷ்கரிப்பு இடம் பெறுகின்றது
இதற்கு நீதி கோரி, வைத்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், இச்சம்பவத்திற்கு எதிரான கண்டனமாகவும் இந்த பணிப்பகிஷ்கரிப்பை மேற்கோள்கின்றனர்.
இதனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தது.