வாட்ஸ்அப்பில் புதிய மெட்டா ஏஐ (AI) விட்ஜெட்

 

வாட்ஸ்அப் செயலியில், மெட்டா ஏஐ (AI) விட்ஜெட் சோதனை செய்யப்படுகிறது. இது, செயலியை திறக்காமலேயே ஏஐ (AI)அம்சங்களை பயன்படுத்த உதவும். பயனர்கள் ஹோம் ஸ்கிரீனில் இருந்தே கேள்விகள் கேட்கலாம், படங்களை பதிவேற்றலாம், வாய்ஸ் மோடில் உரையாடலாம்.

உலகளவில் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப், செயலியை விட்டு வெளியேறாமலேயே பயனர்கள் ஏஐ (AI) இன் அம்சங்களை பயன்படுத்த அனுமதிக்கிறது. இப்போது, ​​டெவலப்பர்கள் ஒரு புதிய மெட்டா ஏஐ (AI) (Meta AI) விட்ஜெட்டை பரிசோதித்து வருகின்றனர். இது விரைவில் வாட்ஸ்அப் பயனர்கள் செயலியைத் திறக்காமலே ஏஐ (AI) அம்சத்தைப் பயன்படுத்த உதவும்.

சில மாதங்களுக்கு முன்பு வாபெட்டைன்போ (WABetaInfo) முதன்முதலில் இதுபற்றி அறிவித்திருந்தது. இந்த விட்ஜெட், இப்போது சமீபத்திய பீட்டா வெர்ஷனில் இருக்கிறது என ஒரு சில வாட்ஸ்அப் பயனர்கள் கூறியுள்ளனர். புதிய மெட்டா ஏஐ (Meta AI) விட்ஜெட், வாட்ஸ்அப் செயலியைத் திறந்து சாட்பாட்டிற்குள் சென்று கேள்விகளைக் கேட்கவேண்டிய அவசியத்தை அகற்றியுள்ளது என்றும் பயனர்கள் மொபைலின் ஹோம் ஸ்கிரீனில் இருந்தே நேரடியாக படங்களை பதிவேற்றவும், ஏஐ (AI) சாட்பாட்டின் (Chat part) வாய்ஸ் மூட் (Voice Mode) மூலம் உரையாடவும் வழிவகை செய்திருக்கிறது என ஒரு பயனர் சொல்லியிருக்கிறார்.