அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை  24 மணிநேர பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் வன்முறை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் குறித்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் இன்று காலை 8 மணி முதல் நாடு தழுவிய 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.