முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு!

 

-சம்மாந்துறை நிருபர்-

தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்திஇ சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான வசந்த பியதிஸ்ஸவினால் பண்முகப்படுத்தப்பட்ட நிதியுதவி கீழ் முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சென்னல் சாஹிரா முன்பள்ளி பாடசாலைக்கு தள பாடங்கள் வழங்கும் நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் வை.எம். நவாஸ் தலைமையில் நேற்று திங்கட்கிழமை சென்னல் சாஹிரா முன்பள்ளி பாடசாலையில் நடைபெற்றது.

இதன் போது, பாடசாலை அதிபர் சிப்னாவிடம் பல இலட்சம் பெறுமதி வாய்ந்த தள பாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில்இ சம்மாந்துறை மல்கம்பிட்டி வட்டார தலைவரும் சமூக சேவையாளருமான எஸ்.எம்.ஏ. மஜீத், மல்கம்பிட்டி வட்டார உப தலைவரும் செயற்குழு உறுப்பினருமான ஏ.எம். ஹினாயத்துல்லாஹ், மல்கம்பிட்டி வட்டார செயற்குழு உறுப்பினர்களான ஏ.எம். பாரூக், ஐ. அபூபக்கர், எம்.எம். ஷிப்னாஸ், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.