
கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்றது கட்சிகள் இணையவில்லை!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் மாத்திரமே ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளுடன் இணைந்த போட்டியிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய இடங்களில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி தமது பங்காளி கட்சிகளுடன் மாத்திரம் இணைந்து போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், அண்மையில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கலந்துரையாடல் மாத்திரமே இடம்பெற்றதாகவும் அந்த அனைத்து கட்சிகளும் இணைந்துள்ளதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.