
ஜீப் வாகனமொன்று விபத்து : இருவர் உயிரிழப்பு!
தம்புள்ளை – பகமுன வீதியில் இன்று திங்கட்கிழமை ஜீப் வாகனமொன்று விபத்துக்குள்ளாகியது.
குறித்த ஜீப் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.