
கரப்பான் பூச்சிப் பாலில் ஊட்டச்சத்தா..?
இது உங்களுக்குப் அருவருப்பாகவும், ஆச்சரியமாகவும் தோன்றினாலும், முகச்சுழிப்பை ஏற்படுத்தினாலும், டிப்ளோப்டெரா பங்க்டேட்டா (Diploptera punctata) என்ற குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த கரப்பான் பூச்சிப் பால், பசுவின் பாலை விட மூன்று மடங்கு அதிக சத்தானது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
“சூப்பர்ஃபுட்” என்ற சொல் பொதுவாக உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வட்டாரங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் “சூப்பர்ஃபுட்” என்றால், பச்சை இலை கீரைகள், பெர்ரி மற்றும் நட்ஸ் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையே குறிக்கிறது.
இந்த உணவுகள் அவற்றின் அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கத்திற்கு பெயர் பெற்றவை மற்றும் சமச்சீர் உணவில் சேர்க்கப்படும்போது நன்மை பயக்கும் என்று கருதப்படுகின்றன. இருப்பினும், சமீபத்திய ஆய்வுகள் சூப்பர்ஃபுட் பிரிவில் எதிர்பாராத புதிய போட்டியாளர் இருக்கலாம் என்று கூறுகின்றன அதுதான், கரப்பான் பூச்சி பால்.
Beta feature