
கின்னஸ் சாதனை; முகம் முழுவதும் நீளமான முடி
இந்தியாவைச் சேர்ந்த லலித் பட்டிதார் என்ற 18 வயது நபர், முகம் முழுவதும் நீளமான முடி முளைத்த நபர் என்ற அரிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
ஒரு பில்லியன் நபர்களில் ஒருவருக்கு ஹைபர்ட்ரைகோசிஸ் எனப்படும் வேர்உல்ஃப் சிண்ட்ரோம் பாதிப்பு காரணமாக இவருடைய முகம் முழுவதும் முடி முளைத்துள்ளது.
அவரது முகத்தில் ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் சுமார் 202 முடிகள் உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 50 பேருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.