ஊழியர்களுக்கு 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை : கவனயீர்ப்பு போராட்டம்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை -புல்மோட்டையில் அமைந்துள்ள இலங்கை கணியமனல் கூட்டத்தாபனத்தில் அமைய அடிப்படையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு கடந்த 9 மாதங்களாக கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை காலை புல்மோட்டை கனியமணல் கூட்டு தாபனத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புல்மோட்டை கணியமணல் கூட்டுத்தாபனத்தில் அமைய அடிப்படையில் கடமையாற்றும் 83 ஊழியர்களுக்கு இவ்வாறு 9 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.இது தொடர்பாக உரிய நிருவாத்துடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லையென தெரிவித்து இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இவ் கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலோகங்களை ஏந்தி, தமது கோரிக்கைகளை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.