
கைதான 14 இந்திய மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைப்பு!
மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டு கைதான 14 இந்திய மீனவர்களும் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 14 பேரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் தாழ்வுபாடு கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்
