
நாடு முழுவதும் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்
நாடு முழுவதும் சுமார் 400 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவை அனைத்தையும் இந்த ஆண்டுக்குள் சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சபைத் தலைவரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (7) நடைபெறும் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது அவர் இதனை தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளை சீரமைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.