பிரபல நடிகை ரன்யா ராவ் கைது

பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்த‌தாக கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் பிரபல நடிகை ரன்யா ராவ், வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தால் (DRI) செய்யப்பட்டார்.

அவர் துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையம் வந்தபோது பெல்ட்டில் வைத்திருந்த 14 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 800 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இவர்பொலிஸார் இயக்குநர் ஜெனரல் (பொலிஸார் வீட்டுவசதிக் கழகம்) ராமச்சந்திர ராவின் மகள் என்று சொல்லப்படுகிறது.

கடந்த 3-ம் திகதி இரவு அன்று துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் இந்தியா வந்துள்ளார். மேலும், கடந்த 15 நாட்களில் 4 முறை துபாய் சென்று திரும்பியதால் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் கவனித்து வந்துள்ளனர்.

நடத்தப்பட்ட சோதனையில் அவரிடம் தங்கம் இருந்தது தெரியவந்தது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டு பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கிருந்து 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

அவரிடம் விசாரணை செய்தபோது ரன்யா ராவ் தன்னை கர்நாடக பொலிஸார் இயக்குநர் ஜெனரல் (டிஜிபி) அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

தன்னை அழைத்துச் செல்வதற்கு பெங்களூரு மாநகர பொலிஸார் வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.

அரசு பதவியில் இருக்கும் அதிகாரிகளுக்கு இருக்கும் சேவைகளை பயன்படுத்தி தப்பிக்கலாம் என்று நடிகை திட்டமிட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து கர்நாடக டிஜிபி கே. ராமச்சந்திர ராவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது மகள் திருமணத்திற்கு பிறகு விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

ரன்யா மற்றும் அவரது கணவரின் தொழில் பற்றி தனக்கோ அல்லது தனது குடும்பத்தினருக்கோ எதுவும் தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தை மீறி இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24