நியூசிலாந்து மகளிர் அணி வெற்றி

நியூசிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மெடி கிரீன் 100 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சமரி அத்தப்பத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

246 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 167 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.

 

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24