நியூசிலாந்து – இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

நியூசிலாந்து மகளிர் மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்றுவருகின்றது.

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து மகளிர் 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 245 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் மெடி கிரீன் 100 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் சமரி அத்தப்பத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில் இலங்கை மகளிர் அணிக்கு 246 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.