பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளின் மேலதிக கொடுப்பனவு அதிகரிப்பு!
பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளுக்கு வழங்கப்படும் தற்போதைய மேலதிக கொடுப்பனவை 25% அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதியிலிருந்து அமலுக்கு வரும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் போக்குவரத்து அதிகாரிகளின் செயல்திறனையும், தரத்தையும் மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தொடர்புடைய கொடுப்பனவுகளைத் தாமதமின்றி வழங்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
