கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ள பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் ‘PNS ASLAT’ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான ‘PNS ASLAT’ என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக இன்று புதன்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுப்படி கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.