
பாலமுனை முள்ளிமலையடி பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு
-அம்பாறை நிருபர்-
பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் காணப்படுவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலமுனை முள்ளி மலையடி பகுதியில் இன்று புதன்கிழமை இவ்வாறு உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பகுதியில் ஒரு வாரமாக துர்நாற்றம் வீசியுள்ளது, இதனால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் அங்கு பார்த்த போது சடலம் இருப்பதை அவதானித்து, பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் நபரின் சடலமானது நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸார், இம்மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

