
நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்றமைக்காக கைது செய்யப்பட்ட நபர் இன்று புதன்கிழமை கண்டி நீதவான் முன்னிலையில் முன்னிறுத்தப்பட்ட பின்னர் மார்ச் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சந்தேக நபர் காரியவசம் பதிரகே கவீச சம்சர காரியவசம் அஹங்கம பகுதியில் உள்ள குருல்லவல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை கடுகன்னாவவில் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சந்தேகநபர் கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்தமையால் கைது செய்யப்பட்டார்.
சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் அவரை மனநல வைத்தியரிடம் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, நீதிமன்றத்தில் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
