இலங்கை வருகிறார் மோடி

 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இந்தியப் பிரதமர் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாகத்   இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மோடி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதை இந்திய உயர்ஸ்தானி காரியாலயம் கடந்த ஜனவரியிலும் அறிவித்திருந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த ஆண்டு இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.