யால தேசிய பூங்காவின் சில வீதிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன

 

மார்ச் முதலாம் திகதி முதல் யால தேசிய பூங்காவைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை காரணமாக யால தேசிய பூங்காவின் வீதி அமைப்புக்கு ஏற்படும் சேதத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் சில வீதிகளை இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக சேதமடையக்கூடிய வீதிகள் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை காலை யால தேசிய பூங்காவில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து இந்த நிலைமையில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.