அமெரிக்காவில் பரவும் காட்டுத்தீ

 

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட காட்டுத்தீ, அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்து, சுமார் 4000 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு கரோலினா மாகாணத்தைச் சுற்றியுள்ள 75 இடங்களில் தீ பரவியுள்ளது.

தீயை அணைக்கும் பணியில் 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு கருதி 2000க்கும் மேற்பட்ட மக்கள் தமது குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக நடைபெறும் தீயணைப்பு பணியில் இதுவரை 30 சதவீதம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.