எமனாக மாறிய உதவி : யாழில் சம்பவம்!

-யாழ் நிருபர்-

மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்து பயணித்த வயோதிப பெண்ணொருவர் தவறி கீழ விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த சாம்பசிவம் தங்கம்மா (வயது 79) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மூதாட்டி கடந்த 17ஆம் திகதி தபால் நிலையத்தில் முதியோருக்கான கொடுப்பனவை பெற்றுக்கொண்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இதன்போது வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணொருவர் அவரை ஏற்றிச்சென்றுள்ளார்’.

திடீரென அந்த மூதாட்டி கீழே விழுந்து மயக்கமடைந்தார், பின்னர் கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.