
வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவிருந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்திருந்தது.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகதபால தெரிவித்தார்.
