சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை

சாய்ந்தமருது  பள்ளிவாசல்களில் விசேடமாக ரமழான் காலத்தில் வழங்கப்படும் நோன்பு கஞ்சி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவால் நேற்று திங்கட்கிழமை  திடீர் சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி  ஜே. மதன்  தலைமையில்  பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். அஸ்லம், ஏ. வாசித் அஹமட் மற்றும் டெங்கு களத்தடுப்பு  பணியாளர்கள் முதலானோர் கலந்து கொண்டனர்.

நோன்பு கஞ்சி தயாரித்தல், விநியோகித்தல் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெளிவூட்டப்பட்டதுடன்  பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் என்பனவற்றில் சூடான கஞ்சி விநியோகிப்பதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் சம்பந்தமான அறிவுரைகள் சுகாதார வைத்திய அதிகாரி ஜே மதன் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருதில் நோன்புக்கஞ்சி தயாரிக்கும் இடங்களில் திடீர் சுகாதார பரிசோதனை