யுக்ரைனுக்கு அளித்து வந்த உதவிகளை நிறுத்திய அமெரிக்கா

 

யுக்ரைனுக்கு இதுவரை அளித்து வந்த நிதி உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

யுக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, அந்த நாடு மீது கடந்த 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது.

ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் தவித்த யுக்ரைனுக்கு ஆயுத உதவியை செய்ய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முன்வந்தார்.

அதன்பின்னர் ஆட்சி மாறியது.

முன்னாள் ஜனாதிபதி ஜோபைடன் கடைபிடித்து வந்த கொள்கையை அடியோடு மாற்றினார் ட்ரம்ப். ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை மீட்டு தரமுடியாது, நேட்டோவில் யுக்ரைனுக்கு இடம் அளிக்க முடியாது என்று ட்ரம்ப் கூறி வருகிறார்.

வெள்ளை மாளிகையில் யுக்ரைன் ஜனாதிபதிக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.