மட்டக்களப்பில் கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு! – UPDATE & VIDEO
மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில்இ கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்தவர் சற்றுமுன் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியில் கிராம அபிவிருத்தி வங்கிக்கு முன்னால் 10 பேர் கொண்ட குழுவினரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது வாழைச்சேனையை சேர்ந்த டிலோஜன் (வயது 33) என்பவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி : மட்டக்களப்பு நகர் பகுதியில் கத்திக்குத்து!