மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் மர்மபொருள் வெடித்ததில் ஒருவர் காயம்!

மட்டக்களப்பு-காத்தான்குடி பொலிஸ் பிரிவில் உள்ள ஆரையம்பதி திருநீற்றுக்கேணி கடற்கரையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில், குறித்த கடற்கரையில் இருந்து மர்மபொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், குறித்த மர்மபொருள் வெடித்ததால் அங்கு பரபரப்பான நிலை உருவாகியது

4 பேர் கடற்கரைக்கு குளிக்க சென்றதில், வரதராஜன் (வயது 25 ) என்பவர் காயம் அடைத்து, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.