சம்மாந்துறை பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல்!

-அம்பாறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஆரம்பித்துள்ள ரமழான் நோன்பு காலத்திலும் இரவு வேளையில் இறைவணக்க வழிபாட்டிற்கு ஆண்கள் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டியுள்ளதனால், அதனை பயன்படுத்தி திருடர்கள் வீடுகளை உடைத்து திருடும் அச்சுறுத்தல் தொடர்கதையாகவே உள்ளது.

 

எனவே பொதுமக்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களை மிக சாதுரியமாக கையாண்டு பாதுகாப்பினை உறுதிப்படுத்தி செல்லுமாறு, கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.