
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் : நியூசிலாந்தை வீழ்த்தியது இந்தியா!
சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்தியிருந்தன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
நியூசிலாந்து அணிக்கு 250 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
250 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 205 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
இதன்படி இந்தப் போட்டியில் இந்திய அணி 44 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
