சாம்பியன்ஷிப் கிரிக்கெட் : நியூசிலாந்து அணிக்கு 250 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!

சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் 12 ஆவது போட்டி தற்போது நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 249 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதன்படி நியூசிலாந்து அணிக்கு 250 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.