மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை தாதியர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைக் குறைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
மேலும் இன்று வியாழக்கிழமை மதிய உணவு நேரத்தில் நண்பகல் 12 மணிக்குப் போராட்டம் நடைபெறும் என்று தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்திருந்த நிலையில் இன்று பகல் 1 மணியளவில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் தாதியர்களால் இந்த எதிர்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.