43 யானைகள் உயிரிழப்பு
2025 ஜனவரியில் மனித – யானை மோதல்களால் சுமார் 43 யானைகள் இறந்ததாகவும், அதே காலகட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக படபெந்தி இன்று தெரிவித்தார்.
மேலும் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும், அதே காலகட்டத்தில் சுமார் 1,195 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
யானை மற்றும் மனித இறப்புக்கு வனவிலங்குத் திணைக்களம் ஒரு மில்லியன் ரூபாய் செலவை ஏற்றுக்கொள்கிறது என்று அவர் மேலும் கூறினார்.