தெற்காசியா விளையாட்டு போட்டிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

தெற்காசிய ஒலிம்பிக் சபையின் நிர்வாகக் குழுஇ நேற்று செவ்வாய்க்கிழமை லாகூரில் நடைபெற்ற கூட்டத்தில், 14வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளை, 2026, ஜனவரி 23 முதல் 31 வரை லாகூர், பைசலாபாத் மற்றும் இஸ்லாமாபாத்தில் நடத்த முடிவு செய்துள்ளது.

இந்தக் கூட்டத்தில் பங்களாதேஷ் , பூட்டான், இந்தியா, மாலைத்தீவுகள், நேபாளம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நீர் விளையாட்டு, வில்வித்தை, தடகளம், பெட்மிண்டன், பில்லியர்ட்ஸ் ஸ்னூக்கர், குத்துச்சண்டை, வாள்வீச்சு, கொல்ஃப், ஜூடோ, கராத்தே, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளு தூக்குதல், மல்யுத்தம், கூடைப்பந்து, கிரிக்கெட், கால்பந்து, கரப்பந்து மற்றும் கடற்கரை கரப்பந்து, ஹொக்கி, கபடி, ரக்பி போன்ற விளையாட்டுகளை, இந்த 14 வது சேர்த்துக்கொள்வதற்கு இணைங்கப்பட்டது.

படகுப் போட்டியும் இந்த விளையாட்டு நிகழ்வில் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.