
காரில் பயணித்த தம்பதியினரின் மோசமான செயல் : பொலிஸாரால் கைது
கொழும்பு மாலபே – ஹோகந்தர பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு காரில் பயணித்த தம்பதியினர் கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹோகந்தர – விஸ்கம் மாவத்தை பகுதியில் நேற்று இரவு வீதி சோதனை கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அந்த வீதியூடாக வேகமாகச் சென்ற காரை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர். ஆனால் ஓட்டுநர் மறுத்து வாகனத்தை திருப்பியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பொலிஸார் காரின் சில்லுகளை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தினர். அந்த கார் மின்கம்பமொன்றில் மோதிய நிலையில் நிறுத்தப்பட்டது.
வாகனத்தை சோதனை செய்தபோது, கார் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.8 கிலோ கஞ்சாவை பொலிஸார் கண்டுபிடித்தனர். சந்தேக நபர்களின் வீட்டை சோதனை செய்ததைத் தொடர்ந்து மேலும் 1 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெல்கொட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய அவரது மனைவி ஆகிய சந்தேக நபர்களே கைது செய்யப்பட்டனர்.
